Nasser Munjee

அமன் கிர்லோஸ்கர்

அடிஷனல் நான்-எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்

திரு அமன் கிர்லோஸ்கர் மே 2018-ல் கிர்லோஸ்கர் சில்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சப்ளை சேன் மேனேஜராக தனது தொழில்வாழ்க்கையை கிர்லோஸ்கர் குரூப் உடன் தொடங்கினார். பின்னர் ஆகஸ்ட் 2019-ல் அவர் கிர்லோஸ்கர் ப்னியூமேடிக் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக சேர்ந்தார்.
2020-ல் அவர் ஜெனரல் மேனேஜர் (ஆபரேஷன்ஸ்) ஆக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு அவர் மென்யூஃபேக்சரிங், சப்ளை சேன், ஃபவுண்ட்ரி, பிளான்ட் என்ஜினியரிங் மற்றும் ஏர் கம்ப்ரெசர் மற்றும் டிரான்ஸ்மிஷன் டிவிஷன்களின் குவாலிட்டி மேலாண்மையில் செயற்பட்டு வருகிறார்.
கோவிட் இரண்டாவது அலை காலத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவைகள் அதிகரித்தபோது ஸ்க்ரூ கம்ப்ரெசர்ஸ் உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அதனைத் தொடர்ந்து 2023-ல் அவர் ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெஃப்ரிஜரேஷன் பிஸினஸ் யூனிட்டின் தலைவராக பொறுப்பேற்றார். இந்தப் பொறுப்பில் அவர் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் விற்பனையை உயர்த்துவதிலும், டிவிஷனின் மொத்த சேல்ஸ் மற்றும் புராஃபிடபிலிட்டி அதிகரிக்கவும் உதவினார்.

அவர் குரூப் லெவல் முயற்சிகளுக்கும் தலைமை வகிக்கிறார், குறிப்பாக ESG கம்ப்ளையன்ஸ் துறையில். அவர் குரூப் லெவல் என்விரான்மென்ட் கன்சர்வேஷன் கமிட்டியின் தலைவர் ஆவார், இது பல்வேறு பிஸினஸ் யூனிட்களில் சஸ்டெயினபிலிட்டி, கிரீன் டெக்னாலஜி மற்றும் சர்குலர் எகானமி தொடர்பான முயற்சிகளை முன்னடிக்கிறார்.

திரும்பி செல்